இந்தியா

ஐதராபாத்தில் சினிமா தியேட்டர்களில் பட்டாசு வெடிக்க தடை

Published On 2025-08-02 11:14 IST   |   Update On 2025-08-02 11:14:00 IST
  • பட்டாசு வெடிக்க கூடாது என சினிமா தியேட்டர் வளாகங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
  • மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி ஜூனியர் என்.டி.ஆர். நடித்த தேவரா படம் வெளியானது.

அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது சினிமா தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட கட்டவுட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக பிரபல திரைப்பட நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது பட்டாசு வெடிக்க கூடாது என சினிமா தியேட்டர் வளாகங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பவன் கல்யாண் நடித்த ஹரிஹர வீர மல்லலு திரைப்படம் வெளியானது. அப்போது அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க சினிமா தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News