NEET PG 2025: தேர்வு மையம், ஹால் டிக்கெட் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு..!
- ஆகஸ்ட் 3ஆம் தேதி மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற இருக்கிறது.
- தேர்வு நடைபெற இருக்கும் இடங்கள் குறித்த விவரம் இ-மெயில் மூலம் அனுப்பப்படும் என அறிவிப்பு.
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான NEET PG 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் தங்களுக்கு எந்த இடத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் இ-மெயில் மூலம் வருகிற 21ஆம் தேதி அனுப்பப்படும். விண்ணப்பத்தாரர்கள் தேர்வு நடைபெறும் இடத்தை மாற்றுவதற்கு ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 17ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது.
ஹால் டிக்கெட் ஜூலை 31ஆம் தேதி வழங்கப்படும். அதில் தேர்வு எழுதக்கூடிய மையம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் தெரிந்து கொள்ளலாம்.
ஏதாவது சந்தேகம் இருந்தால் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை +91-7996165333 உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணை natboard.edu.in and nbe.edu.in ஆகிய இரண்டு இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு காலை 9 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவு செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிடப்படும்.