பீகார் தேர்தல் முடிவு குறித்து சந்திரபாபு நாயுடு கருத்து
- பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- நிதிஷ் குமார் கட்சி கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு இடங்களை பிடிக்க இருக்கிறது.
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனால் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர இருக்கிறார்.
இந்த நிலையில் பீகார் தேர்தலில் என்டிஏ-யின் அமோக வெற்றி குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய மற்றும் வரலாற்று பெற்றி, முற்போக்கு நிர்வாகத்தை தொடர்ந்து பீகார அரசால் கொடுக்க முடியும். மற்றும் பிரதமர் மோடியின் விக்ஷித் பாரத்தின் மீதான தொலைநோக்கு பார்வை ஆகியவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
நிதிஷ் குமார் மற்றும் வெற்றி பெற்ற பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருக்கு வாழ்த்துகள்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் பவன் கல்யாண் "பீகார் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.