இந்தியா

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய மூத்த அதிகாரி லஞ்ச வழக்கில் கைது.. ரூ. 2.62 கோடி பறிமுதல்!

Published On 2025-10-17 16:49 IST   |   Update On 2025-10-17 16:49:00 IST
  • சான்றிதழ் அளிப்பதற்காக அவர் ரூ.10 லஞ்சம் பெற்றுள்ளார்.
  • அவருக்கு நாடு முழுவதும் உள்ள 9 நிலச் சொத்துகள் மற்றும் 20 அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அசாமில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் ஆணையத்தின் (NHIDCL) அதிகாரியை லஞ்ச புகாரில் சிபிஐ கைது செய்துள்ளது.

மைஸ்னம் ரிட்டன் குமார் சிங் அசாமின் தலைநகர் கவ்ஹாத்தியில் உள்ள NHIDCL மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

அசாமில் டெமோவ் முதல் மோரன் புறவழிச் சாலை வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-37-ஐ நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒரு தனியார் நிறுவனத்திடம் பணி நீட்டிப்பு மற்றும் பணி நிறைவுச் சான்றிதழ் அளிப்பதற்காக அவர் ரூ.10 லஞ்சம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சிபிஐ சோதனையில் அதிகாரியிடமிருந்து ரூ. 2.62 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான, நாடு முழுவதும் உள்ள 9 நிலச் சொத்துகள் மற்றும் 20 அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆடம்பர வாகனங்கள் வாங்கியதற்கான ஆவணங்களையும் சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.

இந்த வழக்கில், கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த தனியார் நிறுவனத்தின் பிரதிநிதியான மோகன் லால் ஜெயின், பினோத் குமார் ஜெயின் என்பவரும் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று கவ்ஹாத்தியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.  

Tags:    

Similar News