இந்தியா

வெள்ளத்தில் மூழ்கிய மும்பை சாலைகள்.. களத்தில் குதித்த ஸ்பைடர் மேன் - வீடியோ வைரல்

Published On 2025-08-21 03:15 IST   |   Update On 2025-08-21 03:15:00 IST
  • மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
  • நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் 'ஸ்பைடர் மேன்' உடையணிந்த ஒரு நபர் வைப்பரைக் கொண்டு தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் காட்சி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

'இன்னும் நிறைய தண்ணீரை அகற்ற வேண்டும்' என்ற நகைச்சுவையான தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, கிட்டத்தட்ட 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த வீடியோவுக்கு மும்பைவாசிகள், நகைச்சுவையாகவும்,  மும்பையின் உள்கட்டமைப்பை அரசு மேம்படுத்தாததால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Tags:    

Similar News