இந்தியா

யாருக்கும் பணிந்து போகாத ஈரானிடம் இருந்து மோடி அரசு சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சய் ராவத்

Published On 2025-06-24 22:34 IST   |   Update On 2025-06-24 22:47:00 IST
  • காஷ்மீர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானுடனான மோதலாக இருந்தாலும் சரி, ஈரான் எப்போதும் இந்தியாவுடன் இருந்து வருகிறது.
  • ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு மற்றும் இஸ்ரேலிய தாக்குதலை கண்டிக்க மோடி அரசு தயாராக இல்லை.

இராணுவ ரீதியாக பலம் வாய்ந்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் காட்டும் துணிச்சலை சிவசேனா உத்தவ் பிரிவுத் தலைவர் சஞ்சய் ராவத் பாராட்டினார்.

சுயமரியாதை மற்றும் தைரியம் என்றால் என்ன என்பதை ஈரான் உலகிற்குக் காட்டியுள்ளது என்றும், மத்திய அரசு ஈரானிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அமெரிக்காவின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், "நெருக்கடியின் அனைத்து நேரங்களிலும் ஈரான் எப்போதும் இந்தியாவுடன் நின்றுள்ளது. காஷ்மீர் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானுடனான மோதலாக இருந்தாலும் சரி, ஈரான் எப்போதும் இந்தியாவுடன் இருந்து வருகிறது. ஈரானிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் யாருக்கும் பணிந்து போகவில்லை" என்று தெரிவித்தார்.

முன்னதாக ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு மற்றும் இஸ்ரேலிய தாக்குதலை கண்டிக்க மோடி அரசு தயாராக இல்லாததற்கு காங்கிரஸ் நேற்று கடும் விமர்சனங்களை முன்வைத்தது.   

Tags:    

Similar News