இந்தியா

கேரளாவில் மெஸ்சி பங்கேற்கும் சர்வதேச கால்பந்து போட்டி: பினராயி விஜயன் பெருமிதம்

Published On 2024-11-20 19:29 IST   |   Update On 2024-11-20 19:29:00 IST
  • அர்ஜென்டினா அணி அடுத்த ஆண்டு(2025) கேரளாவிற்கு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • கால்பந்தின் மீதான நமது அன்பைக் கொண்டாட தயாராகுவோம்

கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் பிரபல கால்பந்து வீரர் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடும் என அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் மேற்பார்வையில் இந்த போட்டி நடத்தப்படும். இந்த உயர்தர போட்டிக்கான அனைத்து நிதி உதவிகளும் மாநில வணிகர்களால் வழங்கப்படும். மெஸ்சி கலந்து கொள்ளும் சர்வதேச போட்டியை நடத்தும் திறன் கேரளாவிற்கு உள்ளது என மந்திரி நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "FIFA உலகக் கோப்பை சாம்பியன் அர்ஜென்டினா அணி அடுத்த ஆண்டு(2025) கேரளாவிற்கு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது கேரளா வரலாறு படைக்க உள்ளது. மாநில அரசின் முயற்சிகள் காரணமாக இந்த கனவு நனவாகி வருகிறது. சாம்பியன்களை வரவேற்கவும், கால்பந்தின் மீதான நமது அன்பைக் கொண்டாடவும் தயாராகுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News