இந்தியா

டெல்லியில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. ஒரு மாதமாக நடந்த பயங்கரம்

Published On 2025-10-07 05:42 IST   |   Update On 2025-10-07 05:42:00 IST
  • ஆதர்ஷ் நகரில் ஒரு விடுதியில் தங்கி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
  • வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, செப்டம்பர் மாதம் முழுவதும் பலமுறை பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

அரியானாவின் ஜிந்த் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் டெல்லியில் உள்ள ஆதர்ஷ் நகரில் ஒரு விடுதியில் தங்கி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. செப்டம்பர் 9 ஆம் தேதி, தனது இரண்டு நண்பர்களுடன் விருந்து வைப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை ஹோட்டல் அறைக்கு அந்த இளைஞர் அழைத்தார்.

அங்கு, குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்து சுயநினைவை இழக்க செய்து அந்த இளைஞர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். மற்ற இருவரும் அந்த கொடூரத்தை பதிவு செய்தனர். அதன் பின்னர் அவர்களும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

செப்டம்பர் 9 ஆம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த இளைஞர்கள் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, செப்டம்பர் மாதம் முழுவதும் பலமுறை பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

ஒரு மாதமாக நரகத்தைத் தாங்கிய பிறகு, இளம் பெண் இறுதியாக தைரியத்தை வரவழைத்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறினார்.கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி பெண் சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை மூன்று இளைஞர்கள் மீதும் மீதும் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவர்களைக் கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.   

Tags:    

Similar News