இந்தியா
பள்ளி குழந்தைகள் 17 பேரை பணயக் கைதியாக பிடித்து மிரட்டியவர் சுட்டுக்கொலை
- வெப் சீரிஸ் நடிக்க ஆள் தேவை என்ற விளம்பரம் செய்து பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றியுள்ளார்.
- யூடியூபர் ரோகித்தை மும்பை காவல்துறை சுட்டுக்கொன்றது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஆக்டிங் ஸ்டூடியோவில் குழந்தைகளை பணயமாக பிடித்து வைத்து மிரட்டியவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆக்டிங் ஸ்டூடியோவில் பணியாற்றி வந்தவரும் யூடியூபருமான ரோகித்தை மும்பை காவல்துறை சுட்டுக்கொன்றது.
வெப் சீரிஸ் நடிக்க ஆள் தேவை என்ற விளம்பரம் செய்து பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றி அழைத்து வந்து பயணக்கைதிகளாக வைத்து மிரட்டினார் ரோகித் ஆர்யா.
இந்நிலையில், பள்ளிக் குழந்தைகள் 17 பேரை பணய கைதிகளாகப் பிடித்து வைத்து மிரட்டியவரை காவல்துறை சுட்டுக்கொன்றுள்ளது.