VIDEO: ஆட்டோவில் விளையாடிய சிறுவனை பிட்புல் நாயை விட்டு கடிக்க விட்ட வாலிபர்
- சோஹைல் கான் என்பவர் தனது வளர்ப்பு நாய் பிட் புல்லுடன் ஆட்டோவுக்குள் ஏறினார்.
- சிறுவன் ஹம்சா மட்டும் சோஹையிலிடம் மாட்டிக் கொண்டான்.
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நின்றிருந்த ஆட்டோவில் 11 வயது சிறுவன் ஹம்சா தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டி ருந்தான்.
அப்போது சோஹைல் கான் என்பவர் தனது வளர்ப்பு நாய் பிட் புல்லுடன் ஆட்டோவுக்குள் ஏறினார். நாயை கண்டதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தப்பித்து ஓட சிறுவன் ஹம்சா மட்டும் சோஹையிலிடம் மாட்டிக் கொண்டான்.
முதலில் நாயோடு விளையாட வற்புறுத்திய அந்த நபர் பின்பு அந்த நாயை அவிழ்த்துவிட்டார். நாய் அவனை கடிக்க தொடங்கியது. ஆட்டோவிலிருந்து இறங்கி ஓடிய அந்த சிறுவனை நாய் துரத்திச் சென்று பல இடங்களில் கடித்தது. இதில் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த யாரும் தட்டிக் கேட்கவில்லை. நாயை அழைத்து வந்தவரும் நாய் சிறுவனை கடிப்பதை பார்த்து சிரித்துக் கொண்டி ருந்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை சோஹைல் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.