இந்தியா

ஓடும் பேருந்துக்குள் திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து மாண்ட நபர் - அலறியடித்த பயணிகள்

Published On 2025-09-02 01:07 IST   |   Update On 2025-09-02 01:07:00 IST
  • தனது பையில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
  • பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் வழியாக குதித்தனர்.

மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டம் பத்னாபூர் பகுதியில், கடந்த ஞாயிறு இரவு, புனேவிலிருந்து புசேடுக்குச் சென்ற பேருந்தில் அமர்ந்திருந்த 50 வயது பயணி ஒருவர் திடீரென்று, தனது பையில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனால் அவர் சம்பவ உடல் கருகி இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் வழியாக குதித்தனர். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி அனைவரையும் வெளியேற்றினார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றினர். விசாரணையில், இறந்தவரின் பெயர் சுனில் சஜ்ஜன்ராவ் டேல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் புல்தானா மாவட்டத்தின் மெஹ்கர் தாலுகாவின் அரேகான் கிராமத்தில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

தற்கொலை குறித்த காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்தில் இருந்த 40 பயணிகள் பாத்திரமாக உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.   

Tags:    

Similar News