இந்தியா
மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் புற்றுநோய் பாதிப்பால் கவலைக்கிடம்
- மிலிந்த் கார்கே கடந்த சில நாட்களாக புற்றுநோய் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
- மிலிந்த் கார்கே கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 3 மகன்கள் என மொத்தம் 5 பேர் உள்ளனர்.
இதில் மூத்த மகன் பிரியங் கார்கே சித்தராமையா தலைமையில் கர்நாடக அரசில் பஞ்சாயத்து ராஜ், கிராமப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளின் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
இவரது 2-வது மகன் மிலிந்த் கார்கே. இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோய் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மிலிந்த் கார்கே கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.