இந்தியா
அண்டை நாடுகளில் நடப்பதை உற்று கவனியுங்கள்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
- சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது இந்தப் போராட்டத்திற்கு முக்கியமாக அமைந்தது.
புதுடெல்லி:
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது இந்தப் போராட்டத்திற்கு முக்கியமாக அமைந்தது.
நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேபாளம் போராட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி ஆர் கவாய், நமது அரசியலமைப்பைப் பற்றி பெருமைப்படுகிறோம். நமது அண்டை மாநிலங்களில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். நேபாளத்தை நாங்கள் பார்த்தோம் என தெரிவித்தார்.