இந்தியா

மக்களவை தேர்தல் எங்களுடையதாக இருக்கும்: லாலு பிரசாத் யாதவ்

Published On 2023-12-08 01:29 GMT   |   Update On 2023-12-08 01:30 GMT
  • ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜனதா மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைத்தது.
  • மக்களை தேர்தலுக்கு இந்த மாநிலத் தேர்தல்கள் முன்னோட்டமாக கருதப்பட்டது.

பாராளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கு முன்னோட்டம் என அரசியல் விமர்சகர்களால் கருதப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தலில் பா.ஜனதா மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது.

இதனால் மக்களவை தேர்தல் பா.ஜனதா சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதற்கிடையே பா.ஜனதாவுக்கு எதிராக உருவாகியுள்ள இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலில் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், அரசியல் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவிடம் ஐந்து மாநில தேர்தல் அடுத்த மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதலாமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு லாலு பிரசாத் யாதவ் "அவர்கள் (பா.ஜனதா) எப்படி வெற்றி பெற முடியும். மக்களவை தேர்தல் எங்களுடையதாக இருக்கும. அது மிகவும் பரந்த நிலையாக இருக்கும்" என்றார்.

மேலும், பாராளுமன்றத்தில் அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசும்போது, "ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது. ஒட்டுமொத்த காஷ்மீரையும் கட்டுக்குள் கொண்டு வராமல், போர் நிறுத்தம் அறிவித்தது நேருவின் தவறு" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து லாலுவிடம் கேட்டதற்கு "அமித் ஷாவிற்கு என்ன தெரியும்? அவருக்கு எதுவுமே தெரியாது" என்றார்.

Tags:    

Similar News