இந்தியா
மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு
2024-04-19 03:24 GMT
சென்னை நெற்குன்றத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்களித்தார்.
2024-04-19 03:22 GMT
சென்னை தியாகராய நகரில் இசையமைப்பாளர் இளையராஜா ஜனநாயக கடமை ஆற்றினார்.
2024-04-19 03:17 GMT
சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் தனுஷ் வாக்களித்தார்.
2024-04-19 03:12 GMT
இயக்குநர் வெற்றிமாறன் வாக்களித்தார்.
2024-04-19 03:10 GMT
தேனாம்பேட்டை எஸ்ஐஈடி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் வாக்களித்தனர்.
2024-04-19 03:07 GMT
மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்களித்தார்.
2024-04-19 03:01 GMT
திண்டிவனத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மகளுடன் வந்து வாக்களித்தார்.
2024-04-19 02:57 GMT
திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார்.
2024-04-19 02:54 GMT
கடலூரில் உள்ள 10 வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தாமதம்.
2024-04-19 02:53 GMT
சென்னை கோயம்பேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல். முருகன் வாக்களித்தார்.