இந்தியா

போர்ப்ஸ் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்தார் லலித் கைதான்

Published On 2023-12-15 05:06 GMT   |   Update On 2023-12-15 05:06 GMT
  • சந்தை மதிப்பில் இந்த ஆண்டில் 50 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
  • மொத்த சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என கணக்கிடப்படுகிறது.

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகளவில், இந்திய அளவிலான கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிடும். இந்த பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி, அதானி இடம் பிடிப்பது வழக்கம்.

தற்போது இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் 80 வயதான லலித் கைதான் இணைந்துள்ளார். இவர் மதுபான தயாரிப்பு நிறுவனமான ரேடிகோ கைதானின் அதிபர் ஆவார். இந்த நிறுவனத்தின் வருமானம் 380 மில்லியன் டாலர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இவரது நிறுவனம் மதிப்பு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், புதுவகையான பானங்கள் அறிமுகம் காரணமாக சொத்து மதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என கணக்கீடப்பட்டுள்ளது.

மதுபான நிறுவனத்தால் கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்துள்ள லலித் கைதான் மது அருந்தாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 80 ஆகும்.

Tags:    

Similar News