இந்தியா

கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.41,000 கோடிக்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை

Published On 2025-03-08 08:40 IST   |   Update On 2025-03-08 09:53:00 IST
  • லாட்டரி சீட்டுகள் மூலம் கேரள அரசுக்கு ரூ.11,518.68 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது.
  • கேரளா மாநில பொருளாதாரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது.

கேரளாவில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.41,000 கோடிக்கு லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை சுமார் ரூ.41,000 கோடிக்கு லாட்டரி விற்கப்பட்டுள்ளது.

2021 ஏப்ரல் முதல் 2024 டிசம்பர் 31 வரையிலான காலகட்டங்களில் ரூ.41,138.45 கோடிக்கு விற்பனையான லாட்டரி சீட்டுகள் மூலம் அரசுக்கு ரூ.11,518.68 கோடி வரி வருவாய் ஆகவும், ரூ.2,781.54 கோடி லாபமாகவும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா அரசு தற்போது 7 வாராந்திர லாட்டரிகளையும், ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகளையும் வெளியிட்டு வருகிறது. மொத்தம் 38,577 அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் லாட்டரி சீட்டுகளை விற்கிறார்கள், கேரளா மாநில பொருளாதாரத்தில் லாட்டரி சீட்டு விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News