இந்தியா

நாடு முழுவதும் நோய் தடுப்பு சிகிச்சையில் கேரளம் முன்னோடியாக உள்ளது- ராகுல்காந்தி

Published On 2023-11-30 08:00 GMT   |   Update On 2023-11-30 08:00 GMT
  • வயநாடு மக்கள் அனைவரையும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுகிறேன்.
  • தொகுதியின் வளர்ச்சிக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

திருவனந்தபுரம்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கேரள மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குறிப்பாக தனது தொகுதியான வயநாட்டில் மக்களை சந்தித்தும் வருகிறார். திருவாலியில் வலி மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி அவர் பேசியதாவது:-

கேரளாவின் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு துறை நாட்டிலேயே மிகச்சிறந்த துறைகளில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் நோய் தடுப்பு சிகிச்சையில் கேரளா ஒரு முன்னோடியாக உள்ளது. தன்னால் இயன்ற உதவிகளை செய்யத்தயாராக இருப்பதாகவும், ஆனால் எம்.பி.யாக இருந்து தனக்கு கிடைத்த நிதி மட்டுப்படுத்தப்பட்டதாகவும், கவனமாக பகிர்ந்தளிக்க வேண்டியதாகவும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மறைந்த முஸ்லீம் லீக் தலைவர் சீத்தி ஹாஜி பற்றிய புத்தக வெளியீட்டு விழாவிலும் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வயநாடும், கேரளாவும் தனக்கு 2-வது வீடு போன்றது என்றார். கேரளா மற்றும் வயநாட்டுக்கு நான் எவ்வளவு அதிகமாக வருகிறேனோ, அவ்வளவு அதிகமாக இது எனது வீடு என்று உணர்கிறேன். வயநாடு மக்கள் அனைவரையும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுகிறேன். மேலும் அடுத்த திட்டமாக எனது தாய் சோனியா காந்தியை இங்கு அழைத்துவர உள்ளேன். நான் இங்கு வரும்போது புதிதாக ஒன்றை கற்றுக்கொள்கிறேன். தொகுதியின் வளர்ச்சிக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News