இந்தியா

ஜெயிலைப் பார்த்து பயப்படுவதில்லை: ராகுல் காந்தி, காங்கிரசை தாக்கிய பினராயி விஜயன்

Published On 2024-04-19 10:13 GMT   |   Update On 2024-04-19 10:13 GMT
  • நான் பா.ஜனதா எதிர்த்து போரிடும்போது, பினராயி விஜயன் தன்னை குறிவைத்து தாக்குதல் ஆச்சர்யமாக உள்ளது- ராகுல் காந்தி.
  • அமைப்புகளின் விசாரணை மற்றும் ஜெயில் போன்றவற்றை போதுமான அளவிற்கு பார்த்த அனுபவம் எங்களுக்கு உள்ளது- பினராயி விஜயன்

மத்திய அமைப்புகள் இன்னும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை அல்லது கைது செய்யவில்லை என ராகுல் காந்தி கேட்டிருந்த நிலையில், இடதுசாரி தலைவர்கள் ஜெயிலை பார்த்து பயப்படவில்லை என பதில் அளித்துள்ளார்.

"நான் பா.ஜனதா எதிர்த்து போரிடும்போது, பினராயி விஜயன் தன்னை குறிவைத்து தாக்குதல் ஆச்சர்யமாக உள்ளது. அமலாக்கத்துறை தன்னிடம் 55 மணி நேரம் விசாரணை நடத்தியது, தன்னுடைய மக்களவை எம்.பி. பதவி, வீடுகள் பறிக்கப்பட்டது. தற்போது இரண்டு முதல் மந்திரிகள் ஜெயிலில் உள்ளனர். ஆனால் கேரள மாநில முதல்வருக்கு இது போன்று நடக்கவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

"உங்களுடைய பாட்டி (இந்திராகாந்தி) எங்களின் பெரும்பாலானோரை ஒன்றரை வருடத்திற்கு மேல் சிறையில் அடைத்திருந்தார். அமைப்புகளின் விசாரணை மற்றும் ஜெயில் போன்றவற்றை போதுமான அளவிற்கு பார்த்த அனுபவம் எங்களுக்கு உள்ளது. ஜெயில்கள் பற்றி எங்களுக்கு பயம் இல்லை. ஆகவே விசாரணை, ஜெயில் போன்ற விசங்கள் மூலமாக எங்களை மிரட்ட முடியாது. நாங்கள் அது பற்றி கவலைப்படுவதில்லை" என பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

Tags:    

Similar News