இந்தியா

கார்கில் போர் வெற்றி தினம் வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை நினைவூட்டுகிறது: பிரதமர் மோடி

Published On 2025-07-26 09:55 IST   |   Update On 2025-07-26 09:55:00 IST
  • 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது.
  • ஜூலை 26ஆம் நாள் கார்கில் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1999ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே கார்கில் போர் ஏற்பட்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக இந்தியா கடைபிடித்து வருகிறது. இன்றைய தினத்தில் போர் நினைவு சின்னத்தில் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

அதன்படி ஜூலை 26ஆம் தேதியான இன்று கார்கில் வெற்றி கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் "நாட்டின் பெருமையைப் பாதுகாப்பதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலையும், வீரத்தையும் இந்த நிகழ்வு நினைவுபடுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் "தேசிய போர் நினைவுச் சின்னத்தில் கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது இந்திய பாதுகாப்புப்படை தலைமை தளபதி மற்றும் முப்படைத் தளபதிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News