இந்தியா

வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ அரசை விமர்சிப்பது குடிமக்களின் உரிமை: கபில் சிபல்

Published On 2023-03-16 02:05 GMT   |   Update On 2023-03-16 02:05 GMT
  • ராகுல் காந்தி லண்டனில் பேசிய உரைக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது
  • பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.

புதுடெல்லி :

இந்தியாவில் ஜனநாயம் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக ராகுல் காந்தி லண்டனில் பேசிய உரைக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. இதனால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில்சிபல், ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'பாராளுமன்றத்தின் முட்டுக்கட்டை ஏன்? அரசு என்றால் இந்தியா என்று பொருள் அல்ல. அதைப்போல இந்தியா என்றால் அரசு என்று பொருள் அல்ல. உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ அரசை விமர்சிப்பது குடிமக்களின் உரிமை. அதை இந்தியாவை விமர்சிப்பதாகவோ, தேசப்பற்று இல்லாததாகவோ கருத முடியாது' என குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த காலங்களில் பிரதமர் மோடியும் இவ்வாறு பேசியிருப்பதாகவும் கபில்சிபல் கூறியுள்ளார்.

Tags:    

Similar News