இந்தியா
மாநில அந்தஸ்துக்காக ஜம்மு சட்டசபையைக் கலைக்க தயார்: உமர் அப்துல்லா
- மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல.
- எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள் என்றார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றால் மாநில சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என ஒரு செய்தித்தாளில் படித்தேன். அப்படியானால் அது நடக்கட்டும்.
என் நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்களை பயமுறுத்துவதற்காக இந்த செய்திகள் செய்தித் தாள்களில் விதைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
மாநில அந்தஸ்து எந்த எம்.எல்.ஏ.வுக்கோ அல்லது எங்கள் அரசாங்கத்துக்கோ அல்ல. அது ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக.
எங்கள் எம்.எல்.ஏக்கள் அதற்கு ஒரு தடையாக இருக்க மாட்டார்கள். மாநில அந்தஸ்து வழங்கப்படும் நாளில் நான் ஆளுநரிடம் சென்று சட்டசபையைக் கலைப்பேன் என தெரிவித்தார்.