இந்தியா

ஜெயலலிதா சொத்து ஏலம் விவகாரம்- கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published On 2023-03-25 07:12 GMT   |   Update On 2023-03-25 07:12 GMT
  • வக்கீலை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
  • தீர்ப்பு வழங்கப்பட்டு 1 மாதம் ஆகியும் வக்கீல் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நரசிம்மமூர்த்தி மனுதாக்கல் செய்தார்.

புதுடெல்லி:

பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. உடனடியாக வக்கீலை நியமித்து சொத்துக்களை ஏலம் விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்டு 1 மாதம் ஆகியும் வக்கீல் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நரசிம்மமூர்த்தி மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு ஏப்ரல் 11-ந்தேதி விசாரிக்கும் என்று தெரிவித்தது.

Tags:    

Similar News