இந்தியா

ஜப்பான் தூதரின் ஹோலி கொண்டாட்டம்

Published On 2024-03-25 09:19 IST   |   Update On 2024-03-25 09:19:00 IST
  • வீடியோ வைரலாகி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.
  • பயனர்கள் பலரும் அவருக்கும், அவரது மனைவிக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹீரோஷி சுசுகி இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அங்கு ஷாப்பிங் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. மேலும் நாட்டின் பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றிப்பார்த்த அவர், அப்போது அழகழகாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் தனது மனைவி எய்கோ சுசுகியுடன் இணைந்து வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை கொண்டாடிய காட்சிகளை 'ஹேப்பி ஹோலி' என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் தனது மனைவியுடன் ஹோலி கொண்டாடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ வைரலாகி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்த நிலையில், பயனர்கள் பலரும் அவருக்கும், அவரது மனைவிக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News