ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 50.65 சதவீத வாக்குப்பதிவு
ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஷகுன் பரிஹார் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் "ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைக்கும். ஜம்மு-காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகின்றனர்.
பாஜக உறுதியாக வெற்றி பெறும். பயங்கரவாதம் மிகப்பெரிய பிரச்சனை. பாஜக பயங்கரவாதத்தை குறைத்துள்ளது. பிடிபி, தேசிய மாநாடு கட்சிகள் எப்போதும் சமூகத்தை துண்டாக்க முயற்சி செய்கின்றன. விரைவில் பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் ஆகும்" என்றார்.
ஜம்மு-காஷ்மீரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில் ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்தும் வகையில் அதிக அளவிலான வாக்களார்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை செலுத்தும்படி அழைப்பு விடுக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பனிஹால் தொகுதி பாஜக வேட்பாளர் முகமது சலீம் பாட் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் "எனக்கு மகிழ்ச்சி. தேர்தலை நடத்தியதற்காக பிரதமர் மோடி, தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் இங்கு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றார்
புல்வாமாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி.