இந்தியா

விஞ்ஞானிகள் கூட்டாக பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பில் நம்பி நாராயணனுக்கு எந்த தொடர்பும் இல்லை- இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள்

Published On 2022-08-25 10:19 GMT   |   Update On 2022-08-25 10:19 GMT
  • 1980-களின் பாதியில் தான் இந்தியா விண்வெளி ஆய்வு மையம் சொந்தமாக கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்புக்கான ஆய்வுகளை தொடங்கியது.
  • இஸ்ரோவின் வெற்றிக்கு தனிநபர் காரணமல்ல. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

திருவனந்தபுரம்:

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி என்ற சினிமா பல்வேறு மொழிகளில் படமாக எடுக்கப்பட்டது.

மாதவன் நடிப்பில் உருவான இந்த படத்தில் நம்பி நாராயணன் பற்றி இடம் பெற்ற தகவல்கள் தவறு என்று நம்பி நாராயணனுடன் பணிபுரிந்த முன்னாள் விஞ்ஞானிகள் முத்துநாயகம், சசிகுமார், நம்பூதிரி ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படத்தில் இடம்பெற்ற பல தகவல்கள் தவறு. நம்பி நாராயணனை கைது செய்ததால் தான் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு தாமதம் என்பதும் தவறு.

1980-களின் பாதியில் தான் இந்தியா விண்வெளி ஆய்வு மையம் சொந்தமாக கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்புக்கான ஆய்வுகளை தொடங்கியது.

அப்போது அதன் திட்ட இயக்குனராக இ.வி.எஸ்.நம்பூதிரி நியமிக்கப்பட்டார். என்ஜினின் 12 கட்டங்கள் வரை இ.வி.எஸ்.நம்பூதிரி தலைமையிலான குழுவினரே தயாரித்தனர்.

அந்த சமயத்தில் நம்பி நாராயணனுக்கு கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்புடன் எந்த தொடர்பும் இல்லை. அதன்பின்னர் ஞானகாந்தியின் தலைமையில் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு விரிவுபடுத்தும் பணிகள் நடந்தது. அதிலும் நம்பிநாராயணன் இடம்பெறவில்லை.

அதன்பின்பு 1990-ல் கிரையோஜெனிக் உந்துவிசை இயக்க திட்டத்தை திரவ உந்துவிசை திட்ட மையத்தில் தொடங்கியபோது நம்பிநாராயணனை திட்ட இயக்குனராக முத்துநாயகம் நியமித்தார்.

இஸ்ரோவின் வெற்றிக்கு தனிநபர் காரணமல்ல. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

Similar News