இந்தியா
null

இஸ்ரேல், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

Published On 2025-06-17 09:42 IST   |   Update On 2025-06-17 10:33:00 IST
  • இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • இஸ்ரேல், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களையும் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 24 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களையும் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்தியர்கள் +98 9128109115, +98 9128109109 என்ற எண்களில் உதவிக்கு அழைக்கலாம்.

+98 901044557, +98 9015993320, +91 8086871709 ஆகிய வாட்ஸ்அப் எண்களில் தெரிவிக்கலாம்.

உதவிக்கு பந்தர் அப்பாஸ் +98 9177699036, சஹேதன் +98 9396356649 தொடர்பு கொள்ளலாம்.

cons.tehran@mea.gov.in என்ற மின் அஞ்சலிலும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News