இந்தியா

மேற்கு வங்கத்தில் ஊடுருவல் மிகப்பெரிய சவால்: பிரதமர் மோடி

Published On 2026-01-17 18:07 IST   |   Update On 2026-01-17 18:07:00 IST
  • பல இடங்களில் பேசப்படும் மொழிகூட மாறத் தொடங்கியிருப்பதாக மக்கள் என்னிடம் கூறுகிறார்கள்.
  • மொழி மற்றும் வட்டார வழக்கில் வேறுபாடுகள் உருவாகி வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி இன்று அங்கு சென்றிருந்தார். இன்று முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வடக்கு பெங்காலில் உள்ள மால்டாவில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

ஊடுருவல் மாநிலத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. உலகில் பணப் பற்றாக்குறை இல்லாத, வளர்ந்த மற்றும் செழிப்பான நாடுகள் கூட ஊடுருவல்காரர்களை வெளியேற்றி வருகின்றன. மேற்கு வங்காளத்திலிருந்தும் ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவது அதற்கு சமமாக அவசியமானது. பாஜக ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், ஊடுருவல்காரர்களை வேரறுக்கவும் பெரிய நடவடிக்கை எடுக்கும்.

பல இடங்களில் பேசப்படும் மொழிகூட மாறத் தொடங்கியிருப்பதாக மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். மொழி மற்றும் வட்டார வழக்கில் வேறுபாடுகள் உருவாகி வருகின்றன. ஊடுருவல்காரர்களின் மக்கள்தொகை அதிகரித்துவருவதால், மால்டா மற்றும் முர்ஷிதாபாத் உள்பட மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் கலவரங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

ஊடுருவல்காரர்கள் மாநிலத்தில் குடியேறுவதை உறுதி செய்வதற்காகவே திரிணாமுல் காங்கிரஸின் "சிண்டிகேட்" அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஊடுருவல்காரர்களுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே ஒரு கூட்டணி உள்ளது.

நீங்கள் இந்த கூட்டணியை உடைக்க வேண்டும். பாஜக அரசாங்கம் அமைந்தவுடன், ஊடுருவல் மற்றும் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்பதை மதத் துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த மதுவாக்கள் போன்ற அகதிகளுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

Similar News