இண்டிகோ ஒரு s*** ஏர்லைன்ஸ்.. பாலிவுட் நடிகை ஷமிதா செட்டி வீடியோ வெளியிட்டு காட்டம்
- இவர் தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்.
- சண்டிகர் விமான நிலையத்தில் நான் மாட்டிக்கொண்டுள்ளேன்.
இந்தியாவில் சமீப காலமாக விமான சேவைகளின் தரம் குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. வெடிகுண்டு மிரட்டல்களால் விமான நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் இதுபோன்ற விமர்சனங்கள் அந்நிறுவனங்களுக்கு மேலும் அவப்பெயரை உருவாகியுள்ளது.
அதுவும் பல குற்றச்சாட்டுக்கள் பிரபலங்களால் முன்வைக்கப்படுகிறது. தற்போது இண்டிகோ விமான சேவை குறித்து பாலிவுட் நடிகை ஷமிதா செட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தவர்.
தற்போது தனது சமூக வலைதளப் பதிவில் வெளியிட்ட வீடியோவில் ஷமிதா பேசியதாவது,
ஜெய்ப்பூரில் இருந்து நிகழ்ச்சி ஒன்றுக்காக நான் சண்டிகாருக்கு இண்டிகோ விமானத்தில் வந்தடைந்தேன்.ஆனால் என்னுடையதும் எனது மேக் அப் ஸ்டைலிஸ்ட் உடைய பைகளை ஜெய்ப்பூரிலேயே எடை தொடர்பான பிரச்சனையால் என்னைக் கேட்காமலேயே விமானத்திலிருந்து இறக்கிவைத்திருக்கின்றனர்.
இப்போது ஜெய்ப்பூரில் இருந்து அடுத்த விமானம் சண்டிகாருக்கு வரும்போது அதில் எனது பைகளை அனுப்பி வைப்பதாக விமான ஊழியர்கள் கூறுகின்றனர். எனவே சண்டிகர் விமான நிலையத்தில் நான் மாட்டிக்கொண்டுள்ளேன். இந்த ஊழியர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. இண்டிகோ, உங்கள் விமானங்களில் பறப்பது என்பது மிகவும் s*** ஆன அனுபவம் ['IndiGo you're a pretty s*** airline to fly on!] என்று கடுமையான சாடியுள்ளார். இந்நிலையில் ஷமிதா செட்டியிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.