இந்தியா
இந்தியா தவறான பாதையில் செல்லாது- ராகுல் காந்தி
- பிரதமர் மோடி இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்புகிறார்.
- காங்கிரசின் 'புரட்சிகர தேர்தல் அறிக்கை'க்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.
வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்ற விஷயங்களை மனதில் வைத்துதான் இந்த தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்கள் பலன் தராததால், அச்சத்தின் காரணமாக, அவர் இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்புகிறார்.
காங்கிரஸ் கட்சியின் 'புரட்சிகர தேர்தல் அறிக்கை'க்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.
வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்ற விஷயங்களை மனதில் வைத்துதான் இந்த தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள்.
இந்தியா தவறான பாதையில் செல்லாது!
இவ்வாறு அவர் கூறினார்.