இந்தியா

பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார வளர்ச்சி நாடாக மாறும்- அமித்ஷா

Published On 2024-02-25 12:41 GMT   |   Update On 2024-02-25 12:41 GMT
  • பாஜக மக்களவை பூத் கமிட்டி கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.
  • 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளார்கள்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோவில் உள்ள கண்காட்சி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாஜக மக்களவை பூத் கமிட்டி கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2004- 2014 வரை சோனியா- மன்மோகன் அரசு மத்தியப் பிரதேசத்திற்கு ரூ. 1,99,000 கோடி மட்டுமே வழங்கியது.

அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகளில் மத்தியப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூ. 7,74,000 கோடி கொடுத்தார். ஒவ்வொரு யாத்திரைத் தளங்களையும் பாஜக அரசு மேம்படுத்தியது. 

நோய் வாய்ப்பட்டிருந்த மத்தியப் பிரதேசத்தை உயிர்ப்பித்து வளர்ந்த மாநிலமாக மாற்றியது. வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் இந்தியா மீண்டும் மகத்துவம் பெறும்.

இந்தியா வல்லரசாக மாறும். மேலும், உலகின் 3-வது பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவோம்.

இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு இணையான கட்சி. காங்கிரஸ் என்றால் ஊழல், ஊழல் என்றால் காங்கிரஸ். 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளார்கள்.

10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பைசா கூட திருடினார் என்று அவர்களால் குற்றம் சாட்ட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News