இந்தியா

தொடர்ந்து சரியும் தினசரி பாதிப்பு- புதிதாக 756 பேருக்கு கொரோனா

Published On 2023-05-21 11:17 IST   |   Update On 2023-05-21 11:17:00 IST
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
  • தற்போது ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு 8,115 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று பாதிப்பு 782 ஆக இருந்த நிலையில் இன்று 756 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 86 ஆயிரத்து 461 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,308 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 46 ஆயிரத்து 514 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 8,115 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 560 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று சத்தீஸ்கர், டெல்லி, அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் என 6 பேரும், கேரளாவில் விடுபட்ட 2 மரணங்கள் என 8 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 832 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News