இந்தியா

ஆபரேஷன் பிரம்மா: மியான்மருக்கு 5 விமானங்களில் நிவாரண பொருள் அனுப்பிய வெளியுறவுத்துறை

Published On 2025-03-30 00:23 IST   |   Update On 2025-03-30 00:23:00 IST
  • தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
  • இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,600க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.

புதுடெல்லி:

மியான்மர்-தாய்லாந்தில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.

இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதில் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக மியான்மரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,600க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாகவும், 2000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ல மியான்மர் நாட்டுக்கு ஆபரேஷன் பிரம்மா திட்டம் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன் தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆபரேஷன் பிரம்மா திட்டம் தொடர்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு சேவைகள் மற்றும் 60 டன் நிவாரணப் பொருட்கள் உள்பட 118 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ராணுவ கள மருத்துவமனை பிரிவுடன் இரண்டு C-17 விமானங்கள் மியான்மரில் தரையிறங்கியுள்ளன. இவற்றுடன், இந்தியாவில் இருந்து 5 நிவாரண விமானங்கள் மியான்மரில் தரையிறங்கியுள்ளன என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News