இந்தியா

அதிகரித்த வர்த்தக பற்றாக்குறை.. இந்தியாவின் தற்போதைய நிலை - வெளியான அறிக்கை!

Published On 2025-07-16 02:00 IST   |   Update On 2025-07-16 02:00:00 IST
  • இது 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் 37 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.
  • வர்த்தகப் பற்றாக்குறை, நாட்டின் நாணயத்தின் மதிப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (Free trade அக்ரீமெண்ட்)நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா அதன் ஏழு வர்த்தக கூட்டாளர்களில் ஐந்து பேருடன் வர்த்தக பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் 37 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

2025 நிதியாண்டில் ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 45.2 பில்லியன் டாலர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

2021 முதல், இந்தியா, மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (EFTA) மற்றும் ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளது.

இருப்பினும், 2022 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. 

10 நாடுகளைக் கொண்ட ASEAN கூட்டமைப்புடனான பற்றாக்குறை 2019 நிதியாண்டில் 21.8 பில்லியன் டாலர்களில் இருந்து 2025 நிதியாண்டில் 45.2 பில்லியன் டாலராக உயர்ந்தது.

வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஒரு நாட்டின் இறக்குமதிகள், ஏற்றுமதிகளை விட அதிகமாக இருக்கும்போது ஏற்படும் நிலை. ஒரு நாடு வாங்கும் பொருட்களின் மதிப்பு, அது விற்கும் பொருட்களின் மதிப்பை விட அதிகமாக இருக்கும்போது வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

வர்த்தகப் பற்றாக்குறை, நாட்டின் நாணயத்தின் மதிப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் முக்கிய காரணி ஆகும்.

Tags:    

Similar News