இந்தியா

நாட்டில் சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது: ரேவந்த் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2026-01-18 20:45 IST   |   Update On 2026-01-18 20:45:00 IST
  • பாஜக மறைமுகமாக அரசியலமைப்பை திருத்த முயற்சி செய்து கொண்டு வருகிறது.
  • அதன் ஒரு பகுதியாக SIR அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தெலுங்கானாவில் உள்ள கம்மம் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார்.

இந்த விழாவில் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயகத்தை நிலைநிறுத்த விரும்பினால், பிரதமர் மோடியை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி, பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால், அரசியலமைப்பை திருத்தும். இடஒதுக்கீட்டை ஒழிக்கும் என்றார். பாஜக-வால் 240 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தற்போது, பாஜக மறைமுகமாக அரசியலமைப்பை திருத்த முயற்சி செய்து கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக SIR அமல்படுத்தப்பட்டு வருகிறது.

எழை மக்களின் வாக்கு உரிமையை பறிக்க பாஜக SIR-ஐ பயன்படுத்தி வருகிறது. நாட்டில் சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

Tags:    

Similar News