இந்தியா

IIT பாம்பே விடுதி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

Published On 2025-08-02 16:03 IST   |   Update On 2025-08-02 16:03:00 IST
  • அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
  • ஐஐடி கரக்பூரில் நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார்.

மகாராஷ்டிராவின் IIT பாம்பேவில் 26 வயது மாணவர் ஒருவர் இன்று அதிகாலை விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ரோஹித் சின்ஹா என்ற அந்த மாணவர், ஐஐடி-பம்பாயில் அறிவியல் பிரிவில் படித்து வந்தார்.

இந்தச் சம்பவம் அதிகாலை 2:30 மணியளவில் நடந்தது. அதிகாரிகளின் கூற்றுப்படி, சம்பவத்தின் போது விடுதி மொட்டை மாடியில் இருந்த மற்றொரு மாணவர் இதைக் கண்டதாக கூறப்படுகிறது. 

அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முன்னணி கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஐஐடி கரக்பூரில் நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார்.

இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உச்ச நீதிமன்றம் கல்வி நிறுவனங்களில் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க 15 வழிகாட்டுதல்களை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News