IIM கொல்கத்தா மாணவிக்கு ஆண்கள் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை - சக மாணவர் கைது
- அவருக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டது.
- சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மேண்ட் (IMM) வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் நேற்று புகார் அளித்ததை அடுத்து, ஹரிதேவ்பூர் போலீசார், இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.
மாணவி தனது புகாரில், மன ரீதியான பிரச்சனைக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி, ஆண்கள் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றதும், அவருக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அவர் சுயநினைவை இழந்ததாகவும், சுயநினைவு திரும்பியபோது, தான் விடுதிக்குள் இருப்பதையும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும் உணர்ந்ததாகவும் கூறினார்.
வெளியே சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
காவலில் உள்ள நபர் முக்கிய குற்றவாளியா என்பது குறித்து இன்னும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஐஐஎம் வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.