இந்தியா
குஜராத்தில் சோகம்: பயிற்சியின் போது வெடித்துச் சிதறிய போர் விமானம்
- குஜராத்தில் ஜாகுவார் போர் விமானத்தில் விமானிகள் பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.
- ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் திடீரென வெடித்துச் சிதறியது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் 2 விமானிகள் ஜாகுவார் போர் விமானத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் இரவு 9.30 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறி வயல்வெளியில் விழுந்தது.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஒரு பைலட்டை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாயமான மற்றொரு விமானியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் பயிற்சி விமானம் வெடித்துச் சிதறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.