இந்தியா

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கும் நிகழ்வு - பிரதமர் மோடி பார்வையிட ஏற்பாடு

Published On 2023-08-23 05:01 IST   |   Update On 2023-08-23 05:01:00 IST
  • சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெறுகிறது.
  • இந்நிகழ்வை பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் இருந்தபடி பார்வையிட உள்ளார் என தகவல் வெளியானது.

புதுடெல்லி:

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சந்திரயான் 3 விண்கலம் தரையிறக்கும் நிகழ்வை அங்கிருந்து பார்வையிட உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News