இந்தியா

நேபாளம்- பூடானில் இருந்து இந்தியாவுக்கு வர பாஸ்போர்ட் தேவையில்லை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

Published On 2025-09-03 12:33 IST   |   Update On 2025-09-03 12:33:00 IST
  • 10 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பள்ளி முதல்வர் கையெழுத்துடன் கூடிய ஆவணம் தேவை.
  • 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு எந்த ஆவணமும் தேவையில்லை.

நமது அண்டை நாடுகளான நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு இனி பாஸ்போர்ட், விசா தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருந்த போதிலும் இந்தியா வருபவர்களுக்கு நேபாளம், பூடான் குடியுரிமை சான்றிதழ், அல்லது அந்நாட்டு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் முக்கியம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

10 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பள்ளி முதல்வர் கையெழுத்துடன் கூடிய ஆவணம் தேவை என்றும், 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு எந்த ஆவணமும் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News