இந்தியா

குஜராத்: கல்லூரி வாசலில் அம்பேத்கர் சிலை சேதம்.. மக்கள் போராட்டம்

Published On 2024-12-24 10:44 IST   |   Update On 2024-12-24 10:44:00 IST
  • அம்பேத்கரின் சிலை மூக்கு மற்றும் கண்ணாடியை சேதப்படுத்தி உள்ளனர்
  • அம்பேத்கரின் சிலைக்கு முன் அரசியலமைப்பின் முன்னுரையை தீவைத்து எரித்தார்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் கோக்ரா பகுதியில் ஸ்ரீ கே.கே. சாஸ்திரி கல்லூரிக்கு முன்னால் அமைந்துள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் சிலை நேற்று [திங்கள்கிழமை] அதிகாலை சேதப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர்வாசிகள் போராடி வருகின்றனர்.

அடையாளம் தெரியாத சிலர் அம்பேத்கரின் சிலை மூக்கு மற்றும் கண்ணாடியை சேதப்படுத்தி உள்ளதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் என்.கே.ரபாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.

குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக நீதியின் சின்னம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மகாராஷ்டிராவின் பர்பானி நகரில், அம்பேத்கரின் சிலைக்கு முன் அரசியலமைப்பின் முன்னுரையை எரித்த மர்ம நபரால் அங்கு கலவரம் நடந்து வரும் நிலையில் குஜராத்திலும் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News