இந்தியா

ப.சிதம்பரம்

மத்திய-மாநிலங்களுக்கு இடையேயான நம்பிக்கையை ஜி.எஸ்.டி. சிதைத்து விட்டது: ப.சிதம்பரம்

Published On 2022-07-01 11:19 GMT   |   Update On 2022-07-01 11:19 GMT
  • தற்போதைய அரசின் ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவரைக் கூட முற்றிலும் திகைக்க வைக்கிறது.
  • ஜி.எஸ்.டி. பொருளாதாரத்தை சிதைத்து விட்டது.

ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவையொட்டி, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தற்போதைய ஜி.எஸ்.டி. பிறப்பு குறைபாடுகளை கொண்டது, கடந்த ஐந்து ஆண்டுகளில், அந்த குறைபாடுகள் மிகவும் மோசமாகி விட்டது என தெரிவித்தார்.

இன்று அமலில் உள்ள ஜி.எஸ்.டி முறை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டிருந்த ஜி.எஸ்.டி.அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

தற்போதைய அரசின் ஜி.எஸ்.டி., வரி செலுத்துபவரைக் கூட முற்றிலும் திகைக்க வைக்கும் என்றும், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நம்பிக்கையை இது முற்றிலும் சிதைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சி தற்போதைய ஜி.எஸ்.டி.யை நிராகரிப்பதாகவும், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய ஜிஎஸ்டியை குறைந்த விகிதத்தில் இருக்கும்படியான ஜிஎஸ்டி 2.0 ஆக மாற்றியமைக்க நாங்கள் முயற்சி செய்வோம் என்றும் ப.சிதம்பரம் கூறினார்.

Tags:    

Similar News