இந்தியா

பருப்புக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு: மத்திய அரசு

Published On 2023-12-23 08:35 IST   |   Update On 2023-12-23 08:35:00 IST
  • பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரியை கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ரத்து செய்தது.
  • சமையல் எண்ணெய்க்கு வழங்கப்பட்டிருக்கும் தற்போதைய இறக்குமதி வரி கட்டமைப்பை அரசு நீட்டிக்கவில்லை.

புதுடெல்லி:

பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரியை கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. இதைப்போல 2022 பிப்ரவரி முதல் வேளாண் உள்கட்டமைப்பு செஸ் வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த சலுகைக்கான கால வரம்பு படிப்படியாக நீட்டிக்கப்பட்டு வந்தது. கடைசியாக அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் வரை இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த இறக்குமதி வரி ரத்து மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு செஸ் வரி விலக்கு ஆகியவற்றுக்கான கால அவகாசம் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. உள்நாட்டில் சீரான வினியோகம் மற்றும் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

அதேநேரம் சமையல் எண்ணெய்க்கு வழங்கப்பட்டிருக்கும் தற்போதைய இறக்குமதி வரி கட்டமைப்பை அரசு நீட்டிக்கவில்லை.

Tags:    

Similar News