null
ஜூலை 21-ஆம் தேதி தொடங்குகிறது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை அமைச்சர் கிரண் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார்.
- பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டமாக நடத்தப்படும். இதில் ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கல், நிறைவேற்றம், மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், நிதி மசோதா உள்ளிட்டவை இடம்பெறும்.
இதையடுத்து, மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும். அடுத்து, மூன்றாவதாக குளிர்கால கூட்டத்தொடர்.
இந்த கூட்டத் தொடர்கள் இரண்டிலுமே பெரும்பாலும் மசோதாக்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட அரசு அலுவல்களே பிரதானமாக இடம்பெறும்.
இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ப்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.