இந்தியா

6 வயது சிறுமியையும் ஆட்டையும் பலாத்காரம் செய்த அரசு ஊழியர்.. வீடியோ எடுத்த பக்கத்து வீட்டு நபர்

Published On 2024-08-14 09:19 IST   |   Update On 2024-08-14 10:11:00 IST
  • வீட்டில் உள்ள தூணில் கட்டப்பட்டிருந்த ஆட்டினையும் வன்புணர்வு செய்துள்ளார்.
  • இதைப் பக்கத்து வீட்டில் உள்ளவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்

உத்தரப் பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த  பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த  6 வயது சிறுமியை 50 வயது அரசு ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான அருவருப்பூட்டும் வீடியோ வெளியான நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் புலாந்சகர் [Bulandshahr] பகுதியில் நேற்று, வீடு ஒன்றில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து மாவட்ட ADO [விவசாயத் துறை] அதிகாரியாக உள்ள 50 வயதான கஜேந்திர சிங் என்பவர் மதுபோதையில் அத்துமீறி உள்ளே வந்து சிறுமியை தனது அந்தரங்க உறுப்பை தொடும்படி கட்டாயப்படுத்தி பின் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னர், அந்த வீட்டில் உள்ள தூணில் கட்டப்பட்டிருந்த ஆட்டினையும் வன்புணர்வு செய்துள்ளார்.

இதைப் பக்கத்து வீட்டில் உள்ளவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிடவே, அது போலீசார் கவனத்துக்குச் சென்றுள்ளது. எனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கிலும், இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் ஈடுபட்ட வழக்கிலும் அரசு ஊழியரான கஜேந்திர சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமி வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்காமல் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரருக்கு கண்டங்கள் குவிந்து வருகிறது

Tags:    

Similar News