'சோசியலிஸ்ட்', 'மதச்சார்பின்மை' வார்த்தைகளை அரசியலமைப்பிலிருந்து நீக்க பொன்னான வாய்ப்பு - அசாம் முதல்வர்
- அமெரிக்க அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொற்கள்
- ஆர்எஸ்எஸ் மற்றும் நாட்டின் பிற அறிவுசார் தலைவர்கள் கோரியுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பிலிருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை நீக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் 42வது திருத்தம் மூலம் இந்த இரண்டு வார்த்தைகளும் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறிய அவர் "ஐம்பது ஆண்டுகால அவசரநிலை இந்த ஆண்டு முடிவடைந்துவிட்டது.
சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொற்கள். மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்காமல் பகவத் கீதையிலிருந்து நமது மதச்சார்பின்மையை நாம் எடுக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ் மற்றும் நாட்டின் பிற அறிவுசார் தலைவர்கள் இந்த வார்த்தைகளை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். எனவே, இது அதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு" என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
முன்னதாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஆகியோர் இந்த இரண்டு வார்த்தைகளை அரசியலமைப்பு முகவுரையில் இருந்த நீக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.