அமானுஷ்ய பூஜையில் இளம்பெண்கள் கற்பழிப்பு- விபசாரத்தில் தள்ளிய கும்பல் கைது
- பொருளாதார பிரச்சினை குறித்து அறிந்த திருப்பதியை சேர்ந்த பிரியா என்ற பெண் அவர்களை நாடினார்.
- சாமியார் ஒருவர் பெண்களை அமர வைத்து பூஜை செய்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் ஏழ்மையால் அவதி அடைந்து வந்தார். மேலும் தனது 2 மகள்களுக்கு வயதாகியும் திருமணம் ஆகாததால் வேதனை அடைந்தார்.
இவர்களது பொருளாதார பிரச்சினை குறித்து அறிந்த திருப்பதியை சேர்ந்த பிரியா என்ற பெண் அவர்களை நாடினார். அமானுஷ்ய பூஜை செய்தால் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்ந்து விடும் என கூறினார்.
இதனை நம்பி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மகள்களுடன் கடப்பாவிற்கு சென்றனர். புரோட்டூரில் இருந்த கும்பல் ஒன்று நள்ளிரவில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்தனர்.
அப்போது சாமியார் ஒருவர் பெண்களை அமர வைத்து பூஜை செய்தார். அந்த நேரத்தில் இளம்பெண்களை மயக்கி கும்பல் ஒன்று பலாத்காரம் செய்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பி வந்த இளம்பெண்கள், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
விபச்சார கும்பல் அமிர்தா நகரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அனைவரையும் சுற்றி வளைத்து பிரித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பொருளாதாரம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் அப்பாவி பெண்களை பூஜைக்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்து விபச்சாரத்தில் தள்ளியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் திருப்பதியை சேர்ந்த பிரியா, நந்தியாலா ரவிக்குமார், கர்னூல் காந்தம்மா, கம்பன்கிரி ராமுடு, அனந்தபூர் வெங்கடேஷ், நாகராஜ் மற்றொரு ராமுடு ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் எத்தனை பெண்களை பலாத்காரம் செய்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.