இந்தியா

பெலகாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

Published On 2025-04-15 10:02 IST   |   Update On 2025-04-15 10:02:00 IST
  • பெலகாவி-மிரஜ் வழித்தடத்தில் அனைத்து ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
  • 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து மீரஜ் நோக்கி இரும்புதாது ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரெயில் இன்று காலை புறப்பட்டது. இந்த ரெயில் பெலகாவி பகுதியில் தடம் புரண்டு விபத்தானது.

இதுப்பற்றி தெரியவந்ததும் ரெயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணி சுமார் 3 மணி முதல் 4 மணி நேரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக பெலகாவி-மிரஜ் வழித்தடத்தில் அனைத்து ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சீரமைப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் ரெயில் சேவை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக அந்த வழியாக வந்து கொண்டு இருந்த 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

Tags:    

Similar News