இந்தியா

எல்.கே.ஜி. முதல் பி.ஜி. வரை இலவச கல்வி.. ராகுல் காந்தி அதிரடி அறிவிப்பு

Published On 2023-10-28 14:19 GMT   |   Update On 2023-10-28 14:19 GMT
  • மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதாக வாக்குறுதி.
  • கல்விக்காக ஒரு பைசா கூட செலவிட வேண்டாம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் ராய்ப்பூரில் நடைபெற்ற பிராசார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, சத்தீஸ்கரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதாக வாக்குறுதி அளித்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "நாங்கள் மிகமுக்கிய நடவடிக்கையை எடுக்கப் போகிறோம். அதனை KG to PG என்று அழைக்கிறோம். அதாவது KG (மழலையர் ) முதல் PG (முதுகலை) வரையிலான கல்வியை அரசாங்க நிறுவனங்கள் மூலம் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவோம். அவர்கள் கல்விக்காக ஒரு பைசா கூட செலவிட வேண்டிய அவசியம் இல்லை," என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டெண்டு இலை பறிப்பவர்களுக்கு ஆண்டுதோரும் ரூ. 4 ஆயிரத்தை ராஜீவ் காந்தி ப்ரோஷன் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்குவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பஸ்டார் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News