கேரள முன்னாள் முதல்வர் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
- அச்சுதானந்தன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- பல ஆண்டுகளை பொது சேவைக்காகவும், கேரளத்தின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தார்.
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான அச்சுதானந்தன் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் தனது வாழ்நாளில் பல ஆண்டுகளை பொது சேவைக்காகவும், கேரளத்தின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தார்.
நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களாக இருந்தபோது எங்கள் தொடர்புகளை நான் நினைவு கூர்கிறேன். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.